Nethili meen kuzhambu anchovy fish curry

சுவையான காலிபிளவர் 65

 சுவையான காலிஃப்ளவர் 65 செய்வது எப்படி



  • முதலில் காலிஃப்ளவரை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் வேக வைக்கவும்
  •  அதனுடன் சிறிது கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும் 
  • அடுத்து ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு இஞ்சி பூண்டு விழுது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும் பின்பு அதனுடன் மூன்று டேபிள்ஸ்பூன் கார்ன் ஃப்ளோர் மாவு சேர்த்து மாவு பதத்திற்கு கலக்கவும்
  • வேகவைத்த காலிஃப்ளவரை வடிகட்டி இந்த மாவில் சேர்த்து நன்கு கிளறவும்
  • ஒரு சிறிய துண்டு எழுமிச்சை பழ சாறு அதில் பிழிந்து விடவும்
  • ஒரு வாணலியில் oil  ஊற்றி நன்கு காய்ந்ததும் காலிபிளவர் துண்டுகளை போட்டு நன்கு சிவக்கும்படி பொரித்து எடுக்கவும்
  • சூடான மற்றும் சுவையான காலிஃப்ளவர் 65 தயார் நிலையில் உள்ளது அனைவரும் ருசிக்க தயாராக இருக்கிறது

காலிபிளவர் 65 புகைப்படங்களுடன்


முதலில் காலிஃப்ளவரை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் 


அதனுடன் சிறிது கருவேப்பிலை சேர்த்து தண்ணீர் ஊற்றி 50 % வேக வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்


ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் எடுத்துக் கொள்ளவும் 


அதனுடன் கரம் மசாலாவை சேர்த்துக் கொள்ளுங்கள்


தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்


பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும் 


கான்ஃப்ளவர் மாவு மூன்று டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்துக் கொண்டு தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கலக்கவும் 


வேகவைத்த காலிஃப்ளவரை வடிகட்டி இந்த மாவில் சேர்த்து நன்கு கிளறவும்


ஒரு சிறிய துண்டு எழுமிச்சை பழ சாற்றை அதில் பிழிந்து விடவும்


பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை கடாயில் ஊற்றி சூடு செய்யவும்


காலிஃப்ளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு மிதமான தீயில் நன்கு சிவக்கும்படி பொரித்து எடுக்கவும்



காலிஃப்ளவர் 65 தயார்



Comments